மணிமங்கலம் ஊராட்சியில் இருளர் இன மக்களுக்கு 100 நாள் வேலை பணிக்கான அட்டை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மணிமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திரா நகரில் 70-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.;

Update:2021-08-17 13:14 IST
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மணிமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திரா நகரில் 70-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தற்போது வேலை வாய்ப்பு ஏதும் இல்லாததால் வறுமையில் வாடுவதாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, உத்தரவின் பேரில், உடனடியாக மணிமங்கலம் இந்திரா நகர் இருளர் குடியிருப்பு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்று 5 குடும்பங்களின் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 100 நாள் வேலைக்கான அடையாள அட்டையை வழங்கினார்.

இதனை தொடர்ந்து நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் கே.முத்துக்குமார் இந்திரா நகர் இருளர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் நேரில் சென்று கள ஆய்வு செய்து 28 குடும்பங்களின் ஆவணங்களை சாரிபார்த்து மாகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் அட்டை வழங்கப்பட்டது.

உடன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, உதவியாளர் ஜெயந்தி, ஊராட்சி செயலர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்