தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி

ஊஞ்சலூரை சேர்ந்த மாணவி தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்றார்.

Update: 2021-08-18 17:03 GMT
ஊஞ்சலூரை சேர்ந்த மாணவி தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்றார். 
கல்லூரி மாணவி
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கொளாநல்லி ஊராட்சிக்கு உள்பட்ட காரணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம். விவசாய தொழிலாளி. அவருடைய மனைவி லோகாம்பாள். இவர் நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் தூய்மை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் தேன்மொழி. இவர் கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை வேதியியல் படித்து வருகிறார்.
தங்கம் வென்றார்...
தேன்மொழி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 4-வது தேசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடினார். இதில் அவர் வெற்றி பெற்று தங்கம் வென்றார். தேன்மொழி ஏற்கனவே மாநில அளவில் பெருந்துறையில் நடந்த கபடி போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவிலான கபடி போட்டியில் சாதனை படைத்த தேன்மொழிக்கு கிராம மக்கள் மற்றும் கல்லூரி பேராசிரிய-பேராசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்