பணம், நகை திருட்டு
பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பணம், நகை திருடப்பட்டது.;
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே உள்ள வைகாசிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது50). விவசாயி. இவரது மனைவி பெயர் கலாராணி (46). இவர் வீட்டிற்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க ஆந்திர மாநில வாலிபர் தான் வைத்தியர் என்றும் கால் வலிக்கு மருந்து கொடுப்பதாக கூறி மயக்க மருந்து கொடுத்துள்ளார். அதை நம்பி வாங்கி குடிந்த அந்த பெண் மயக்கம் அடைந்தார். இதையடுத்து மர்ம நபர் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்க தாயத்து உள்ளிட்டவற்றை திருடி சென்றுவிட்டார். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்த கலாராணி வீட்டு திருட்டு நடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து வீடு புகுந்து திருடிய வாலிபரை தேடி வருகின்றனர்.