மதுபோதை தகராறில் வாலிபர் குத்திக்கொலை
மதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை,
மதுரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் கொலை
அங்கு நண்பர்களான ரவுடி ரிஸ்வான்அலி(22), குருமூர்த்தி(19) ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் பிரபுவை மதுபாட்டிலால் தாக்கியும், கத்தியாலும் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எஸ்.எஸ்.காலனி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் கைது
அவரால் நாம் அனைவரும் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று நினைத்து அவரை உடனடியாக மதுரையில் இருந்து செல்லுமாறு ரிஸ்வான் அலியும், குருமூர்த்தியும் கூறியுள்ளனர். ஆனால் பிரபு அங்கிருந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் பிரபு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் 3 பேர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.