போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

போலீஸ் குடியிருப்புகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2021-08-21 19:51 IST
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் உள்ள சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி மற்றும் காஞ்சீபுரம் தாலுகா போன்ற போலீஸ் குடியிருப்புகளில் 200 போலீஸ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலீஸ் குடியிருப்புகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் குடும்பத்தினரின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார். மின்விளக்கு சரிசெய்தல் உள்ளிட்ட அடிப்படை குறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பெண்கள் கூறினர். அவர்களின் குறைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், சுந்தர்ராஜி, சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்