விபத்தில் ஊராட்சி துணைத்தலைவர் பலி
விபத்தில் ஊராட்சி துணைத்தலைவர் பலியானார்.;
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை அருகே துவரிமானைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 62). துவரிமான் ஊராட்சி துணைத் தலைவரான இவர் தினமும் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று குளித்து விட்டு வருவது வழக்கம். அதே போல் நேற்று துவரிமான் கண்மாய் கரை அருகே திண்டுக்கல்- திருமங்கலம் நான்குவழிச்சாலை ஓரத்தில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.