செல்போன் கடையை உடைத்து திருட்டு
செல்போன் கடையை உடைத்து திருட்டு நடந்துள்ளது.;
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியை சேர்ந்தவர் ஹைதர் அலி (வயது37) செல்போன் கடை வைத்துள்ளார். இந்த கடையை நள்ளிரவில் மர்மநபர்கள் உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 9 விலை உயர்ந்த செல்போன்கள், ரூ. 52 ஆயிரம், செல்போன் உதிரிபாகங்களை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பதமநாபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.