6 பவுன் நகை திருட்டு

முதியவரிடம் 6 பவுன் நகை திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2021-08-23 02:41 IST
மதுரை, 
மதுரை கூடல்நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 71). சம்பவத்தன்று இவர் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது கூட்ட நெரிசலில் அவர் வைத்திருந்த 6 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்