பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்ட 2 ரவுடிகள் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.;
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான காஞ்சீபுரம் பொய்யாகுளம், யதோத்தகாரி மாடவீதியை சேர்ந்த முருகன் (வயது 33), மணிமங்கலம், பாரதி நகரை சேர்ந்த ஏகாம்பரம் (40) ஆகியோர் தலைமறைவாக இருந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக விஷ்ணுகாஞ்சி மற்றும் மணிமங்கலம் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் மேற்படி நபர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.