பவானி, அந்தியூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

பவானி, அந்தியூரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Update: 2021-08-24 21:44 GMT
அந்தியூர்
ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பவானி அருகே சித்தார் குறிச்சி பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 
 அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கொடுமுடியை சேர்ந்த அண்ணாதுரை (வயது 60) என்பதும், அவர் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து அண்ணாதுரையை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1,050 கிலோ ரேஷன் அரிசியையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அந்தியூர் தெப்பக்குளம் வீதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு ரோந்து சென்றனர். 
அப்போது சாலையோரமாக அரிசி மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். 
விசாரணையில் அவர் அந்தியூரை சேர்ந்த தீனதயாளன் (22) என்பதும், அவர் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல  முயன்றதும் தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து தீனதயாளனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்