ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்;

Update:2021-08-26 21:27 IST
கோவை

வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியர்க ளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 

தொற்று பரவல் குறைந்ததால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 2-வது அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. 

தற்போது கொரோனா 2-வது அலை பரவல் குறைந்து வருகிறது. இதனால் 12-வது முறையாக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக் கப்பட்டன. 

அதன்படி வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

இதில் 9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

எனவே பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி கண்டிப்பாக போட்டு இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. 

மேலும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடா விட்டாலும் பள்ளியை திறக்க அனுமதிக்க முடியாது என்று கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

 இதனால் தற்போது மாவட்டம் முழுவதும் ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

35,700 பேர்

மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நேற்று கோவை மாநகர பகுதியில் 23 இடங்களில் 23,700 பேருக்கும், ஊரக பகுதிகளில் 51 மையங்களில் 12 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 74 மையங்களில் 35,700 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்