காஞ்சீபுரம் மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட ஊராட்சிகள்

காஞ்சீபுரம் மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட ஊராட்சிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-26 23:59 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பெருநகராட்சியில் ஏற்கனவே 51 வார்டுகள் உள்ளன. தற்போது காஞ்சீபுரம் மாநகராட்சி அறிவிப்பு செய்ததையொட்டி மேலும் சில ஊராட்சிகள் இந்த மாநகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

காஞ்சீபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகள் மற்றும் ஊராட்சிகளாக கோனேரிக்குப்பம், கருப்படை தட்டடை, கீழ்கதிர்பூர், திருப்பருத்திக்குன்றம், சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், கீழம்பி, புத்தேரி, களியனூர், வையாவூர், ஏனாத்தூர்.

காஞ்சீபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநகராட்சி அந்தஸ்து தி.மு.க. அரசால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதால் காஞ்சீபுரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரூ.17 கோடி செலவில்

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் நகராட்சியை, மாநகராட்சியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாநகராட்சி ஆனதையொட்டி தற்போதுள்ள பழமை வாய்ந்த கட்டிடம் இடிக்கப்பட்டு அதற்கு பதிலாக ரூ.17 கோடி செலவில் 4 அடுக்கு கொண்ட மாடி கட்டிடம் லிப்ட் வசதியுடன் செயல்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்