கீழே கிடந்த காலாவதியான உணவு பொருளை சாப்பிட்ட மாணவர் சாவு
அலங்காநல்லூரில் விளையாட சென்ற போது கீழே கிடந்த காலாவதியான உணவு பொருளை எடுத்து சாப்பிட்ட மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் வாந்தி எடுத்தார்.;
அலங்காநல்லூர்,
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அலங்காநல்லூரை சேர்ந்தவர் சின்னாண்டி. இவரது மகன் குணா (வயது 13). 8-ம் வகுப்பு மாணவர். இவரது நண்பர் சசிகுமார் (11). 7-ம் வகுப்பு மாணவர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் விளையாட சென்றனர்.அங்கு கீழே கிடந்த காலாவதியான ரூ.5 மதிப்புள்ள உணவு பொட்டல பாக்கெட்டுகளை எடுத்து சாப்பிட்டனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் திடீரென்று வாந்தி எடுத்தனர். வயிற்று போக்கால் அவதிப்பட்டனர்.
சாவு