கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர தடுப்பூசி மையம் தொடக்கம்

கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர தடுப்பூசி மையம் தொடக்கம்;

Update:2021-08-30 23:27 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையினர் அறிவுரையின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன்படி, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கிணத்துக்கடவு பகுதியில் கேரளா எல்லையில் வசித்து வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

24 மணி நேர தடுப்பூசி மையம்

இந்த நிலையில் கிணத்துக்கடவில் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, நேற்று முன்தினம் 24 மணி நேர தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கு கிணத்துக்கடவு அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் சண்முக பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். இதில், அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருந்தாளுனர் பாலாஜி, தலைமை செவிலியர் கீதா, துணை செவிலியர்கள் கனகபூஷணம் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி 24 மணி நேரம் போடும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்