கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது;

Update:2021-08-31 21:39 IST
கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது
கோவை
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு கோவில் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சாய்பாபாகாலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

போலீசார் விரைந்து சென்று, கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த ரத்தினபுரியை சேர்ந்த ஜெயசிங் (வயது31) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஜெயசிங் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்