இரை ேதடி வந்த புள்ளி மான் சாவு

இரை ேதடி வந்த புள்ளி மான் சாவு;

Update:2021-09-01 02:02 IST
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டியை சுற்றியுள்ள மலை பகுதிகளில் மான்கள் இல்லை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வன பகுதியில் இருந்து திசை மாறி வரும் மான்கள் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மான்கள் சாலை விபத்து மற்றும் முள்வேலியில் சிக்கி பலியாகியுள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொட்டாம்பட்டி அருகே உள்ள உதினிப்பட்டியில் இரைதேடி வந்த 3 வயது மதிக்கத்தக்க புள்ளி பெண் மான் தோட்டத்தில் இருந்த இரும்பு கேட் கதவு வழியாக செல்லும்போது அதில் சிக்கி கொண்டது. கேட்டில் சிக்கி கொண்ட மான் அதில் இருந்து தப்பிக்க முயலும் போது அதன் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனக்காப்பாளர் சங்குபிள்ளை மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் வலைச்சேரிபட்டி மலை அடிவாரத்தில் வனத்துறையினர் மானின் உடலை அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்