கோவில் உண்டியலை திருடி தூக்கி சென்ற வாலிபர்
கோவில் உண்டியலை திருடி தூக்கி சென்ற வாலிபர்;
மதுரை
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக பூசாரி பாலசுப்பிரமணியம் வந்துள்ளார். அப்போது கோவிலில் இருந்த உண்டியலை காணவில்லை. உடனே இதுகுறித்து கோவில் பூசாரி, அறங்காவலர் கார்த்திகேயன் ஆகியோர் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு 2½ மணி அளவில் வாலிபர் ஒருவர் கோவில் கேட்டை தாண்டி உள்ளே குதித்து உண்டியலை தனி ஆளாக சுமந்து கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை திருடி சென்றவரை தேடி வருகிறார்கள்.