ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு;

Update:2021-09-06 22:47 IST
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
கோவை

கோவை மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 62). ஆட்டோ டிரைவர். இவர், சம்பவத்தன்று பொள்ளாச்சி மெயின் ரோடு, சுந்தராபுரம் சந்திப்பு அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ தாறுமாறாக ஓடியது. இதில் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்டு செல்லதுரை படுகாயம் அடைந்தார். 

அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்