சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது;

Update:2021-09-08 00:57 IST
மேலூர்
மேலூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் போலீஸ் படையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது அழகர்மலை அடிவார கிடாரிப்பட்டி பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுதொடர்பாக வல்லாளபட்டியை சேர்ந்த சுதீஷ் (வயது 25) உள்பட 4 பேரை கைது செய்து, சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 3 சேவல்கள், 1 லட்சம் ரூபாய், 5 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்