மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தியின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.;

Update:2021-09-08 23:58 IST
மதுரை,
சிவகங்கையை சேர்ந்த அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்பட சிலர் மீது மதுரை மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சமீபத்தில் கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த வசந்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட கூடுதல் மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, “வசந்தி தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் எஸ்.முத்துக்குமார் அதே கோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி அனுராதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்திக்கு ஜாமீன் அளிக்கும்பட்சத்தில், அவர் மீதான வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்று அவருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.
இதேபோல வக்கீல் எஸ்.முத்துக்குமார் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவில், வசந்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்