பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது

மேலூர் அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-09-09 01:53 IST
மேலூர்,

மேலூர் அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 பெட்ரோல் குண்டு வீச்சு

மேலூர் அருகே சுண்ணாம்பூரை சேர்ந்தவர் குமார் (வயது 42). விவசாயி. சம்பவத்தன்று இரவில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குமாரின் வீடு மற்றும் ஊர் மந்தை ஆகிய 2 இடங்களின் அருகில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
அப்போது அந்த குண்டுகள் சப்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு கிராம மக்கள் வீட்ைட விட்டு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

3 பேர் கைது

 விசாரணையில் குமாருக்கும், மதுரையை சேர்ந்த உறவினர் நந்தகுமாருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக மதுரையை சேர்ந்த நந்தகுமார், அவரது நண்பர்கள் பெருங்குடியை சேர்ந்த அசாருதீன் (23), விளாச்சேரியை சேர்ந்த மற்றொரு அசாருதீன் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்