நம்பியூர் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

நம்பியூர் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Update: 2021-09-09 11:32 GMT
நம்பியூர்
நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரும், 29 வயது வாலிபரும் உறவினர்கள் ஆவர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன. இருவீட்டாரும் அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் திட்டமலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமகன், மணமகளுடன் உறவினர்கள் அங்கு வந்திருந்தனர். இதுபற்றி ஈரோடு மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  சைல்டு லைன் உறுப்பினர் விமல்யா மற்றும் நம்பியூர் வட்டார ஊர் நல அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர், திருமணம் குறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் அங்கு சென்று இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது போலீசார் அவர்களிடம், பெண்ணுக்கு 16 வயதே ஆவதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க கூடாது. மீறி திருமணம் செய்து வைத்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். இதனையடுத்து நேற்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்