வேருடன் தோண்டி எடுக்கப்பட்ட ஆலமரம் வேறு இடத்தில் நடப்பட்டது

பெருந்துறை அருகே வேருடன் தோண்டி எடுக்கப்பட்ட ஆலமரம் வேறு இடத்தில் நடப்பட்டது.

Update: 2021-09-09 15:44 GMT
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில், முருகன் மலைக்கோவில் அருகே 3 ரோடுகள் சந்திக்கிறது. இங்கு ரவுண்டானா ஒன்றை அமைக்க, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.
3 ரோடு பகுதியில் நூறாண்டு பழமையான ஆலமரம் ஒன்று, விழுதுகளுடன் இருந்தது. ரோடு விரிவாக்கத்திற்காக, இந்த ஆலமரத்தின் கிளைகள் கடந்த 10 தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினரால் வெட்டி அகற்றப்பட்டது. பின்னர் மரம் வேருடன் பிடுங்கி எடுக்கப்பட்டது. 
இந்த நிலையில் அந்த பகுதி இளைஞர்கள் அந்த ஆலமரத்தை வேறு இடத்தில் நட முடிவு செய்தனர். இதுபற்றி அறிந்த சீனாபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் டி.சி.சுப்பிரமணியம் தனது சொந்த செலவில் லாரி ஏற்பாடு செய்து, ஆலமரத்தை  பழைய வீரணம்பாளையத்துக்கு கொண்டு செல்ல உதவினார். அதன்பின்னர் அந்த ஆலமரம், அங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே குழி தோண்டி நடப்பட்டது. நூறாண்டு பழமையான ஆலமரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்களின் சமூக சேவையை, சீனாபுரம்  பகுதிைய சேர்ந்த பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்