4 விநாயகர் சிலைகள் பறிமுதல்

உசிலம்பட்டியில் 4 விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-09 18:22 GMT
உசிலம்பட்டி,

உசிலம்பட்டியில் 4 விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிலை வைக்க தடை

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா 3-வது அலையை தடுக்கும் ெபாருட்டு பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட இந்த ஆண்டு அரசு தடை விதித்து உள்ளது. அதோடு வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடுமாறு பொதுமக்களை அரசு அறிவுறுத்தி இருந்தது.
வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை அருகில் உள்ள கோவிலில் வைத்தால் அதை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீர்நிலைகளில் கரைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அரசு அறிவித்தது.

4 விநாயகர் சிலைகள் பறிமுதல்

அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட ராமத்தேவர் தெருவில் தடையை மீறி 2 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி போலீசார் விைரந்து சென்று 2 விநாயகர் சிலைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் உசிலம்பட்டி வத்தலக்குண்டு சாலையில் சரக்கு வாகனத்தில் 2 பெரிய விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. இது பற்றி அறிந்ததும் போலீசார் அந்த 2 விநாயகர் சிலைகளையும் பறிமுதல் செய்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்