பொள்ளாச்சியில் 200 வழக்குகளுக்கு தீர்வு

பொள்ளாச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 200 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2021-09-11 18:30 GMT
பொள்ளாச்சி


பொள்ளாச்சியில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 200 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.


தேசிய லோக் அதாலத்


நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குளை குறைக்கும் வகையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை தேசிய லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெறும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி லோக் அதாலத் நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த வருவதை தொடர்ந்து நேற்று நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது.


பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடந்த லோக் அதாலத்திற்கு குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் கோவை மாவட்ட நீதிபதி பாபு தலைமை தாங்கினார். இதில் சப்-கோர்ட்டு நீதிபதி பாலமுருகன், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுபாஷினி, ஜே.எம். 2 நீதிபதி செல்லையா, வக்கீல்கள் சங்க தலைவர் துரை, வக்கீல்கள் ரவி, கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



200 வழக்குகளுக்கு தீர்வு


மோட்டார் வாகன விபத்துகள் 25 விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 19 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.86 லட்சத்து 45 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல், சீட் பெல்ட் அணியாமல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் 74 எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது. அபராத தொகையாக ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டது.


சட்டவிரோதமாக மது விற்ற வழக்குகளில் சமரசம் செய்யப்படும் வழக்குகள் 40-க்கு தீர்வு காணப்பட்டது. இதில் சப்-கோர்ட்டு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம். 1, ஜே.எம்.2 ஆகிய கோர்ட்டுகளில் உள்ள வழக்குகள் 662 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 200 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடியே 27 லட்சத்து 2 ஆயிரத்துக்கு சமரசம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்