சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு

பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

Update: 2021-09-14 17:23 GMT
பொள்ளாச்சி

பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

மாணவர் சங்கத்தினர் முற்றுகை
வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மாணவர் களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர்  பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

பின்னர் அவர்கள் நுழைவு வாயில் முன் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

சப்-கலெக்டரிடம் மனு 

இதை தொடர்ந்து சிலர் மட்டும் சப்-கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா தலைமையில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மலைவாழ் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றி தழ் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் அவர்கள் படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலைக்கு செல்கிறார்கள். எனவே அவர்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். 

மேலும் பழங்குடியின மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு எளிதில் சென்று வர போக்குவரத்து வசதியையும் செய்து கொடுக்க வேண்டும். அதுபோன்று ஆழியாறு, ஆனைமலை பகுதிகளில் புதிய உண்டு, உறைவிட பள்ளியை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அப்போது மாவட்ட துணை தலைவர் கயல்விழி, தாலுகா தலைவர் சந்தியா, செயலாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்