திருப்போரூர் முருகன் கோவில் நிலங்கள் துல்லியமாக அளவிடும் பணி தொடக்கம்

திருப்போரூர் முருகன் கோவில் நிலங்கள் துல்லியமாக அளவிடும் பணி தொடங்கப்பட்டது.

Update: 2021-09-15 00:37 GMT
திருப்போரூர், 

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் அனைத்தும் துல்லியமாக அளவீடு செய்து பாதுகாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி காஞ்சீபுரம் இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள கோவில் நிலங்களை நவீன முறையில் துல்லியமாக அளவீடு செய்யும் பணி நேற்று திருப்போரூர் முருகன் கோவிலில் தொடங்கப்பட்டது. 61 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டது.

இதுபோன்று செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் அளவீடு செய்யப்பட உள்ளது என்று செயல் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்