பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-09-16 03:14 IST
வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் கிழக்குதெருவை சேர்ந்த முனீஸ்வரன் மனைவி ரேகா (வயது 32). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் முன்விரோதம் காரணமாக அதேஊரை சேர்ந்த வின்சென்ட் (40) என்பவரும் அவரது குடும்பத்தினரும் தகராறு செய்து தாக்கினார்களாம். இதுசம்பந்தமாக ரேகா கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து வின்சென்டை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்