மக்களை விட்டு கொரோனா நோய் விலக 48 நாட்கள் மவுன விரதம் இருக்கும் பெண்

மக்களை விட்டு கொரோனா நோய் விலக 48 நாட்கள் மவுன விரதம் இருக்கும் பெண்

Update: 2021-09-15 22:00 GMT
சென்னிமலை
சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 32). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவருடைய கணவர் இறந்துவிட்டார். சிவபெருமான் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டு கடந்த 6 வருடங்களாக வீட்டிலேயே பூஜைகள் செய்து வருகிறார்.
இதற்கு அப்பகுதியில் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதே பகுதியில் உறவினர் ஒருவரின் இடத்தில் தனியாக குடில் அமைத்து அங்கு விநாயகர், சிவபெருமான், நந்தீஸ்வரர், லிங்கேஸ்வரர் சிலைகளை வைத்து பூஜைகள் நடத்தி வருகிறார்.
உலக நன்மைக்காகவும், கொரோனா நோய்த்தொற்று முழுமையாக நீங்கவும் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று 48 நாட்கள் மவுன விரதத்தை இவர் தொடங்கியுள்ளார். 
 பகல் நேரத்தில் மட்டும் உணவு சாப்பிட்டு காலை மற்றும் இரவு வேளைகளில் உணவு உண்ணாமல் நீர் ஆகாரங்களை மட்டும் பருகி வருகிறார்.
மேலும் ஊருக்குள் வழிபாடு செய்யக்கூடாது என அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுப்பதாக பேப்பரில் எழுதி அங்கு வருபவர்களிடம் காட்டுகிறார். மவுன விரதம் இருந்து வரும் தேவிக்கு நரேன் கார்த்திக் என்ற மகனும், நவீனா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் தேவிக்கு உதவி செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்