பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த வாலிபர் சாவு
மடத்துக்குளம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
கிணத்துக்கடவு,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடிபுத்தூரை சேர்நதவர் ராஜேஷ்குமார்(வயது 29). இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தேவரடிபாளையம் பகுதியில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ராஜேஷ்குமார் கோழிப்பண்ணையில் குடிபோதையில் இருந்தார். அப்போது தாகம் எடுத்ததை தொடர்ந்து தண்ணீர் என நினைத்து பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். பின்னர் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.