நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம்; போக்சோவில் எலக்ட்ரீசியன் கைது

நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த எலக்ட்ரீசியனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-16 22:33 GMT
நம்பியூர்
நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த எலக்ட்ரீசியனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மாணவி மாயம்
ஈரோடு மாவட்டம் நம்பியூர்  பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது பிளஸ்-2 மாணவி.  சம்பவத்தன்று இவர்  வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் பள்ளிக்கூடம் முடிந்து மாலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்ைல.  
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நம்பியூர் போலீசில் புகார் செய்தனர். 
அதன் பேரில் நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கடத்தி திருமணம்
விசாரணையில் அந்த மாணவியை கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் பிரதீப்குமார் (வயது 27) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மாணவியையும், அந்த வாலிபரையும் போலீசார் தேடி வந்தனர். 
இந்தநிலையில் நம்பியூர் அருகே உள்ள மொட்டணம் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் என்பதும், பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்ததும் தெரிய வந்தது. 
கைது
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். 
மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் மாணவி மீட்கப்பட்டார். கைது செய்யப்பட்ட பிரவீன்குமார் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்