ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகை

ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகை;

Update:2021-09-20 19:37 IST
குன்னூர்

கொரோனா தொற்று காலத்தில் குன்னூர் நகராட்சியில் சுகாதார துறை மூலம் ஒப்பந்த அடிப்படையில் 120 பெண் ஊழியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்டனர். 

அவர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, காய்ச்சல், சளி போன்றவற்றை பரிசோதனை செய்து வந்தனர். இதில் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தினர்.

 இந்த நிலையில், ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

எனவே அவர்கள் சம்பளம் வழங்ககோரி அதிகாரிகளிடம் சேரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு சரியான பதில் அளிக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க கோரி நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது நிதி வந்ததும் சம்பளம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பளம் வழங்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்