பஸ் சக்கரத்தில் சிக்கி அடையாளம் தெரியாத வாலிபர் பலி

கோவையில் பஸ் சக்கரத்தில் சிக்கி அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.;

Update:2021-09-20 22:45 IST
கோவை

கோவையில் பஸ் சக்கரத்தில் சிக்கி அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.

பஸ் டிரைவர்

கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 43), பஸ் டிரைவர். இவர் கோவை லாலிரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தான் ஓட்டும் தனியார் டிராவல்சுக்கு சொந்தமான பஸ்சை நிறுத்தி இருந்தார். 

அவர் வழக்கம்போல பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பஸ்சை எடுக்க வந்தார். பஸ்சுக்குள் ஏறிய அவர் அதை ஸ்டார்ட் செய்து பின்னோக்கி இயக்கினார். 

அப்போது பஸ்சின் பின்சக்கரத்தின் அருகே 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தார். 

உடல் நசுங்கி பலி 

அதனை கவனிக்காமல் டிரைவர் ஆறுச்சாமி, பஸ்சை இயக்கி உள்ளார். இதில் தூங்கிக்கொண்டு இருந்த வாலிபர் மீது பஸ் சக்கரம் ஏறியது. அப்போது அந்த வாலிபர் அலறி துடித்தார். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு ஆறுச்சாமி உடனே பஸ்சை நிறுத்தினார். 
பின்னர் பஸ்சுக்கு அடியில் சிக்கி இருந்த அந்த வாலிபரை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

டிரைவர் கைது

இதுகுறித்து கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ஆறுச்சாமியை கைது செய்தனர். மேலும் இறந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்