குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது;

Update:2021-09-22 02:52 IST
மதுரை
மதுரை காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 35), டிரைவர். இவர் அடிக்கடி வாகனத்தில் ரேஷன்அரிசி கடத்தும் போது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதை தடுக்கும் வண்ணம் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யமாறு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மதுரை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன் பேரில் கலெக்டர் குண்டர் சட்டத்தில் மாரியப்பனை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து மாரியப்பன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

மேலும் செய்திகள்