புகார் பெட்டி

புகார் பெட்டி;

Update:2021-09-22 03:06 IST
புகார் பெட்டி
கல்லூரி பெயர் பலகை  
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் நுழைவுவாயிலில் கல்லூரி பெயர்பலகை இருந்தது. தற்போது அந்த பலகை இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கல்லூரி நுழைவுவாயிலில் மீண்டும் பெயர்பலகை அமைக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 
திருநாவுக்கரசு, தொண்டி. 
குண்டும்&குழியுமான ரோடு
மதுரை காமராஜபுரம் இந்திரா நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை கால்வாய் பிரச்சினை இருந்து வருகிறது. அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதோடு அங்குள்ள சாலை குண்டும்&குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&சிவக்குமார், இந்திரா நகர், மதுரை
மாட்டு தொழுவம் அல்ல..
படத்தை பார்த்ததும் இது ஏதோ மாட்டு தொழுவம் என்று நினைத்து விடாதீர்கள். சிவகாசி&விளாம்பட்டி ரோட்டில் தான் மாடுகள் இப்படி கூட்டமாக நிற்கின்றன. சாலையில் நிற்கும் மாடுகளால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவங்கள் உண்டு. போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்படும். எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கிராம மக்கள், விளாம்பட்டி.
மின் விளக்குகள் தேவை
மதுரை  மாவட்டம் கரடிப்பட்டி பஞ்சாயத்து பாரதியார் நகர் 3&வது தெருவில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பத்மநாபன், நாகமலைபுதுக்கோட்டை.
நிதி ஒதுக்கீடு செய்தும் பலனில்லை
மதுரை மாநகராட்சி 28&வது வார்டில் உத்தங்குடி பொன்மணிகார்டன் வடக்கு ஆதிஷ்வரன் நகர் விரிவாக்க பகுதியில் சாலையானது மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இங்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் நடக்கவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆதிஷ்வரன் நகர், மதுரை
சாலை வசதி 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி ஊராட்சி சடைமுனியன் வலசை கிராமத்தில் எரியாத தெருவிளக்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த சாலையில் தற்போது நடந்து கூட செல்ல முடியவில்லை. குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வி.குமார், ஏர்வாடி சடைமுனியன் வலசை.
பராமரிப்பு இல்லாத சமுதாயக்கூடம்
மதுரை மாநகராட்சி வார்டு எண்&47, கோ.புதூர் ஜவகர்புரம் பகுதியில் இருக்கக்கூடிய சமுதாயக்கூடம் பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அதனை மாநகராட்சி அதிகாரிகள் செப்பனிட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா?.
சுதாகர், ஜவகர்புரம்.
ஊராட்சி மன்ற கட்டிடம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கரிசல்குளம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் மழைநீரால் பாதிப்படைந்து பெயர்ந்து விழுந்தது வருகிறது, எனவே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கரிசல்குளம் கிராம மக்கள்.
கழிவுநீர் கால்வாய் வசதி
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளாங்குளம் கிராமத்தின் தெற்குதெரு (குருநாதன் கொவில்) பகுதியில் சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் அங்குள்ள வீட்டு பகுதிக்கு செல்வதால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதற்கு நிரந்தர தீர்வு கான அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், கிளாங்குளம்.
சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சிலுக்கப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் தொட்டி இடிந்து விழுமோ என அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
& பொதுமக்கள், சிலுக்கப்பட்டி. 
பஸ் வசதி 
வத்திராயிருப்பில் இருந்து மற்ற கிராமங்களுக்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணம் செய்ய கூடிய நிலை உள்ளது. எனவே வத்திராயிருப்பில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
& பொதுமக்கள், வத்திராயிருப்பு. 
நிழற்குடை வேண்டும்
மதுரை மாவட்டம் திருமங்கலம்&விருதுநகர் சாலையில் அமைந்துள்ள பெரியார் நாகம்மையார் நகர் பஸ் நிறுத்தத்தில் பெயர்ப்பலகை இல்லாமல் உள்ளது. பெயர்ப்பலகை அமைக்கவேண்டும். மேலும் சாலையின் ஒருபுறம் மட்டும் நிழகுடை உள்ளது. மறுபுறமும் நிழற்குடை அமைத்து தரவேண்டும். பஸ் நிறுத்துமிடத்தில் புதர் சூழ்ந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அந்த புதர்களை அகற்ற வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மு.சுந்தரராசன், கரிசல்பட்டி, திருமங்கலம்.
ரெயில்வே பாலப்பணிகள் விரைவு பெறுமா?
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் சாலை முதல் பழைய பஸ் நிலையம் வரை ரெயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் சாலைகள் ஒரு வழிப்பாதையாக உள்ளன. இது தெரியாமல் வெளியூர் வாகனங்கள் வழி தவறி சென்று அவதிப்படுகின்றன. எனவே விரைவாக ரெயில்வே பாலப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோக்குமார், வண்ணாங்குண்டு.
தெருவிளக்கு வசதி தேவை
மதுரை பீ.பீ.குளம் சேக்கிழார் வீதி கல்லு சந்தில் 6 மாதமாக தெருவிளக்கு எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி பயம் உள்ளது. எனவே தெருவிளக்குகளை புதிதாக அமைக்க வேண்டும்
பொதுமக்கள், சேக்கிழார் வீதி.

மேலும் செய்திகள்