தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்

தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்;

Update:2021-09-25 02:48 IST
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பவானி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை சான்று வழங்க கால தாமதப்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் திம்மநத்தம் கிராம மக்கள் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் பவானியை இடமாறுதல் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்