Complaint box
அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையம் மீனாநகரில் தெரு விளக்குகள் வசதி கிடையாது.;
தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?
அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையம் மீனாநகரில் தெரு விளக்குகள் வசதி கிடையாது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலை உள்ளது. வெளிச்சமின்றி இருப்பதால், சமூக விரோதிகளின் நடமாட்டம் காணப்படுகிறது. சிலர் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்வதால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே மீனாநகரில் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்குமார், சோளிபாளையம்.