8 ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் 8-ம் வகுப்பு மாணவியுடன் பழகிய ஐ.டி. ஊழியர், அந்த மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி 60 பவுன் நகையை பறித்தார். தலைமறைவான அவரை போலீ சார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2021-09-27 22:43 IST
கோவை

இன்ஸ்டாகிராம் மூலம் 8-ம் வகுப்பு மாணவியுடன் பழகிய ஐ.டி. ஊழியர், அந்த மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி 60 பவுன் நகையை பறித்தார். தலைமறைவான அவரை போலீ சார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

8-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 23). ஐ.டி. ஊழியர். இவருக்கு கோவை பீளமேட்டை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் 2 பேரும் நட்புடன் பழகினார்கள். அந்த நட்பு காதலாக மாறியது. 

இதையடுத்து அடிக்கடி கோவை வந்த ஸ்ரீநாத், அந்த மாணவியை அடிக்கடி பல இடங்களுக்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது அந்த மாணவியை அவர் கட்டாயப்படுத்தி பலாத்காரமும் செய்ததாக தெரிகிறது. 

வீடியோ எடுத்து மிரட்டல் 

அப்போது அதை அந்த மாணவிக்கு தெரியாமல் ஸ்ரீநாத் தனது செல் போனில் வீடியோவும் எடுத்து உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீநாத் அந்த மாணவிக்கு தொடர்பு கொண்டு நாம் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்த காட்சிகளை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து உள்ளேன் என்று கூறி உள்ளார். 

அத்துடன் அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், எனக்கு பணம் அல்லது நகை வேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி, அந்த வாலிபரிடம் அழுது கெஞ்சினார். இருப்பினும் இரக்கம் காட்டாத அவர், தனக்கு பணம் அல்லது நகை தர வேண்டும் இல்லையென்றால் வீடியோக்களை வெளியிடுவேன் என்று மீண்டும் மிரட்டினார்.

60 பவுன் நகை பறிப்பு 

இதனால் பயந்து போன அந்த மாணவி தன்னிடம் உள்ள நகையை கொடுப்பதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து கோவை வந்த அவா் மாணவியை சந்தித்து நகையை வாங்கிச்சென்றார். கடந்த 3 மாதங்களில் பல கட்டங்களாக இதுபோன்று அந்த மாணவியை மிரட்டி 60 பவுன் நகையை பறித்து உள்ளார். 

இந்த நிலையில் வீட்டில் உள்ள நகைகள் காணாமல் போனதால், சந்தேகம் அடைந்த பெற்றோர், அந்த மாணவியிடம் கேட்டு உள்ளனர். அப்போது அந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். 

போக்சோவில் வழக்கு 

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோர் கோவை கிழக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் தவுலத் நிஷா, ஸ்ரீநாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்