கோவை அரசு கலைக்கல்லூரியில் சுற்றுலா தின விழா

கோவை அரசு கலைக்கல்லூரியில் சுற்றுலா தின விழா;

Update:2021-09-27 23:08 IST
கோவை

சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது. சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை தலைவர் சங்கீதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் சித்ரா விழாவை தொடங்கி வைத்தார். 

இதில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும்போது, முதன்முதலில் இடங்களைத் தேடி தொடங்கிய சுற்றுலா பயணம், அடுத்து வணிகத்தை தேடி செல்லக்கூடியதாக மாறியது. 

தற்போது முழுவதும் இயற்கையை தேடி சுற்றுலா சென்று வருகின்றனர். சுற்றுலாத் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன என்றார்.

முன்னதாக கோவை மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த்குமார் அறிவுறுத்தலின் பேரில் கோவை அரசு கல்லூரி சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை மாணவர்கள் 50 பேர் சுற்றுலா ஆர்வலர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். 

இவர்களுக்கான அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.  விழாவில் பயிற்சி  கலெக்டர் சரண்யா, உதவி பேராசிரியர் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்