சந்தன மரம் வெட்டி கடத்திய 2 வாலிபர்கள் கைது

ஆசனூர் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-09-29 21:01 IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து 2 பேர் சந்தன மரக்கட்டைகளை எடுத்து கொண்டு வந்ததை பார்த்தனர். இதனால் வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஆசனூர் பங்களாத்தொட்டியை சேர்ந்த ரங்கசாமி (வயது24), சிவக்குமார் (28) ஆகியோர் என்பதும், இவர்கள் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து சந்தனமரத்தை வெட்டி கடத்தி அவற்றை விற்பதற்காக கொண்டு சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்