உரம் வாங்க கடைகள் முன்பு குவிந்த விவசாயிகள்

அந்தியூர் பகுதியில் உரம் வாங்க கடைகள் முன்பு விவசாயிகள் குவிந்தனர்.

Update: 2021-09-29 15:38 GMT
அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி, நெல், மக்காச்சோளம், கரும்பு போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக அந்தியூர் பகுதியில் உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உரம் போடாததால் பயிர்கள் வாடி வருகின்றன.
இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து அந்தியூர் பகுதிக்கு நேற்று மிகவும் குறைவான உரங்கள் வந்தன. இதுபற்றி அறிந்ததும் விவசாயிகள் உரம் வாங்குவதற்காக அந்தியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடைகள் முன்பு குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கி சென்றனர். சிலர் மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் என நினைத்து கூடுதலாக உரத்தை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்