ஊட்டச்சத்து விழிப்புணர்வு மனித சங்கிலி
ஊட்டச்சத்து விழிப்புணர்வு மனித சங்கிலி;
கோவை, செப்.30-
சிங்காநல்லூரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கையில் பதாகைகள் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.