திறந்த வெளியில் குவிக்கப்பட்டு இருந்த நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டன
திறந்த வெளியில் குவிக்கப்பட்டு இருந்த நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டன;
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரில் திறந்தவெளியில் உள்ள களத்தில் அறுவடையைான நெல்கள் கொள்முதல் செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த நெல்களை கொள்முதல் செய்ய அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அவைகள் மழையில் நனைந்து சேதமாகும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இந்தநிலையில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகனிடம் விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கவனத்திற்கு நிலையூர் முருகன் கொண்டு சென்றார். அவர் கலெக்டரிடம் நெல் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் நேற்று கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவின்பேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழக அதிகாரிகள் நேரடியாக அங்கு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் உடனடியாக நெல்கொள்முதல் செய்தனர். இதனையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.