உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் கே.எஸ்.அழகிரி பேட்டி.

Update: 2021-09-30 08:54 GMT
தாம்பரம்,

செங்கல்பட்டு, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது.

சட்டமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட 3 தீர்மானங்களை தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. சட்டமன்றத்தில் வெளிப்படைத் தன்மையோடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் நாடு முழுவதும் உள்ள நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 100 சதவீத வெற்றி பெறும்.

கூட்டணி என்றாலே போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எல்லா கட்சிகளுக்கும் இருக்கும். களத்தில் இறங்கி வேலை செய்த பின்னர் அனைத்து வருத்தங்களும் போய்விடும் என அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, பல்லாவரம் நகர தலைவர் தீனதயாளன், தாம்பரம் நகர தலைவர் விஜய் ஆனந்த் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்