புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
பேரையூர்,
பேரையூர் போலீசார் புகையிலை தடுப்பு சம்பந்தமாக எஸ்.கீழப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (வயது 45) என்பவர் விற்பனை செய்வதற்காக 182 புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.