லிப்ட் கேட்ட தொழிலாளியிடம் நகை பறித்தவர் கைது
லிப்ட் கேட்ட தொழிலாளியிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை,
மதுரை சாமநத்தம் பகுதியை சேர்ந்தவர் தண்டீஸ்வரன். இவருடைய மனைவி சாந்தி (வயது 48). இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த நபரும் சாந்தியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சிறிது தூரம் சென்றுள்ளார். பின்னர் சாந்தியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை கத்தியை காட்டி மிரட்டி பறித்து தப்பிச் சென்றார். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சாந்தியிடம் நகை பறித்தவர், சிவகங்கை மாவட்டம் கூட்டுறவுபட்டி பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத் (32) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 19 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.