புஞ்சைபுளியம்பட்டி அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; வாழைகள் முறிந்து விழுந்து நாசம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.;

Update:2021-10-04 02:34 IST
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூர், பனையம்பள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. 
சூறாவளிக்காற்றால் சொலவனூரில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 1,000 வாழைகள் முறிந்து விழுந்து நாசம் ஆனது.
இதேபோல் பனையம்பள்ளியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருடைய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 400 வாழைகள் முறிந்து விழுந்து நாசம் ஆனது.

மேலும் செய்திகள்