சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update:2021-10-05 20:13 IST
கோவை

கோவை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமு தலைமை தாங்கினார்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும், 


தேர்தல் அறிக்கையில் கூறியது போல் சாலையோர வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், 

2014-ம் ஆண்டு சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, ஏற்கனவே கடை வைத்திருந்த அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்