குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம்
குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம்;
பொள்ளாச்சி
கனமழை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள் ளம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்புடன் வெளியேற்றினர்.
குரங்கு நீர்வீழ்ச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு (கவியருவி) வால்பாறை சக்தி எஸ்டேட் மற்றும் வனப்பகுதியில் உற்பத்தி யாகும் நீரோடைகள் மூலம் நீர்வரத்து உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைவாக கொட்டுகிறது.
எனவே அங்கு குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட னர்.
இந்த நிலையில் வழக்கம் போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த அருவியில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தனர்.
கொட்டி தீர்த்த கனமழை
அப்போது திடீரென்று மதியம் 2 மணிக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது. இதை பார்த்ததும் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறையினர் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் அதிகமாக வருவதை பார்த்ததும், உடனடியாக சுற்றுலா பயணிகளை அவசர, அவசரமாக பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
காட்டாற்று வெள்ளம்
இதற்கிடையில் திடீரென்று செம்மண் நிறத்தில் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. வனப்பகுதியில் இருந்து மரக்கிளைகள், கற்கள் தண்ணீர் அடித்து வரப்பட்டன.
ஆனால் அதற்குள் வனத்துறையினர் சுதாரித்துக் கொண்டு சுற்றுலா பயணிகளை வெளியேற்றியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்வதை தடுக்க நுழைவு வாயில் மூடப்பட்டு, அங்கு வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.