உத்தரபிரதேச சம்பவம்: காங்கிரஸ் மீது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

உத்தரபிரதேச சம்பவம் குறித்து காங்கரஸ் மீது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

Update: 2021-10-06 07:41 GMT
கோவை,

கோவை தெற்கு தொகுதி பா. ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் தொகுதி மக்கள் இதற்கு முன்னர் கொடுத்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறியவும், புதிய கோரிக்கைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

அம்மன்குளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையை முழுநேர கடையாக மாற்ற வேண்டும். கோவையில் முதியோர் உதவி தொகை கிடைக்காதவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பா.ஜ.க. ஆட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் உயர்த்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சம்பள பணம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்தமாநில முதல்-மந்திரி பாரபட்சமற்ற வகையில் நடவடிக்கைகள் எடுப்பார். உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் வருவதால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கூறினார்.

இதை தொடர்ந்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கராவிடமும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

மேலும் செய்திகள்